|
|
கணவன்வரக் கல்லுருவம்
நீத்தாள் இணையாய
மாற்றாள் குழவிவிழத் தன்குழவி யுங்கிணற்று
வீழ்த்தேற்றுக் கொண்டெடுத்த வேற்கண்ணாள் வேற்றொருவன் |
|
இணையாய
மாற்றாள் குழவி விழத் தன் குழவியும் கிணற்று வீழ்த்து ஏற்றுக் கொண்டு எடுத்த வேற்
கண்ணாள் - தன்னோடொத்த மாற்றாளுடைய குழவி கிணற்றின்கண் வீழ்ந்ததனால் அது குறித்து
உலகோர் தன்மீது பழி சுமத்தாமைப் பொருட்டுத் தன்னுடைய குழவியையும் கிணற்றின்கண் தள்ளி
அவ்விரு குழந்தை களையும் அக் கிணற்றினின்றும் எடுத்த வேல் போலுங் கண்களையுடையாளும்
;
மாற்றாள் - தன் கணவனுக்கு வாய்த்த
மற்றொரு மனைவி ; கற்பின் பெருமையால் இரு குழவியையும் ஊறின்றி யெடுத்தாளென்க. |
|