|
20 |
வீழ்த்தேற்றுக் கொண்டெடுத்த
வேற்கண்ணாள் வேற்றொருவன்
நீள்நோக்கங் கண்டு நிறைமதி வாண்முகத்தைத்
தானோர் குரக்குமுக மாகென்று போன
கொழுநன் வரவே குரக்குமுக நீத்த
பழுமணி அல்குற்பூம் பாவை விழுமிய |
|
வேற்றொருவன்
நீள் நோக்கங் கண்டு - அயலானொருவன் தன்னைத் தொடர்ந்து பார்க்கும் பார்வையினை
அறிந்து, நிறைமதி வாண் முகத்தைத் தான் ஓர் குரக்கு முகம் ஆகென்று - தனது கலை நிறைந்த
திங்கள்போலும் ஒள்ளிய முகத்தினை ஓர் குரங்கின் முகமாகக் கடவதென்று அங்ஙனமாக்கியிருந்து,
போன கொழுநன் வரவே குரக்கு முகம் நீத்த பழுமணி அல்குற் பூம் பாவை - வெளிச் சென்றிருந்த
தன் கணவன் வந்தவளவிலே அக் குரங்கின் முகத்தினை ஒழித்த சிவந்த மணிகள் பதித்த மேகலை
அணிந்த அல்குலினையுடைய பொலிவுற்ற பாவைபோல்வாளும் ;
நீள்நோக்கம் - விடாமற் பார்த்தல்.
பழுமணி - பழுத்த மணி ; சிவந்த மணி. |
|