11. வஞ்சினமாலை

35
மட்டார் குழலார் பிறந்த பதிப்பிறந்தேன்
பட்டாங் கியானுமோர் பத்தினியே யாமாகில்
ஒட்டே னரசோ டொழிப்பேன் மதுரையுமென்
பட்டிமையுங் காண்குறுவாய் நீயென்னா விட்டகலா


35
உரை
38

பட்டாங்கு யானும் ஓர் பத்தினியே ஆமாகில் - அங்ஙனம் அப் பதியிற் றோன்றிய யானும் ஓர் கற்புடை மகள் என்பது உண்மை யாயின், ஒட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையும் - நீ இனிதிருக்க ஒருப்படேன் மன்னனோடு மதுரை நகரினையும் அழிப்பேன், என் பட்டிமையும் காண்குறுவாய் நீ என்னா விட்டு அகலா - என் படிற்றினையும் நீ இப்பொழுதே காண்பாயாகவென்று கூறிக் கோயிலை விட்டு நீங்கி ;

பட்டாங்கு - உண்மை ; பட்டாங்கு ஆமாகில் எனக் கூட்டுக. பட்டிமை - வஞ்சத் தன்மை ; மீச்செலவுமாம். பெருந்தேவி கணவனொடு வீழ்ந் திறந்ததனை நோக்காதே இங்ஙனங் கூறினாள் என்க.