|
40
|
நான்மாடக் கூடல் மகளிரு
மைந்தரும்
வானக் கடவுளரும் மாதவருங் கேட்டீமின |
|
நான்
மாடக் கூடல் மகளிரும் மைந்தரும் வானக் கடவுளரும் மாதவரும் கேட்டீமின் - மதுரை நகரத்துள்ள
பெண்டிரும் ஆடவரும் தேவர்களும் மிக்க தவமுடைய முனிவர்களும் யான் கூறுவதனைக் கேண்மின்
;
நான்கு மாடங்கள் கூடினமையால் மதுரை
நான் மாடக் கூடலாயிற்று. நான்கு மாடங்களாவன : திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை,
திருநடுவூர். வானக் கடவுளர் என்பதற்குச் சுடரொடு திரிதரும் தேவ முனிவர்கள் எனக் கூறலும்
அமையும். கேட்டீமின் :வினைத்திரிசொல். |
|