12. அழற்படு காதை


ஏவல் தெய்வத் தெரிமுகம் திறந்தது
காவல் தெய்வங் கடைமுகம் அடைத்தன


1
உரை
2

       ஏவல் தெய்வத்து எரிமுகம் திறந்தது - கண்ணகியின் ஏவல் பெற்ற தீக்கடவுளின் எரியின் கூறு வெளிப்பட்டது, காவல் தெய்வம் கடைமுகம் அடைத்தன - நகர் காக்குந் தெய் வங்கள் கோட்டை வாயில்களைக் காவாதொழிந்தன ;

       "பண்டேயோர் ஏவலுடையேன்" என வஞ்சின மாலையுள் அங்கி வானவன் கூறுதலின் ஈண்டு ஏவல் என்றது அதனையும் குறிக்கும். காவற்றெய்வம் - இந்திரன், இயமன், வருணன், சோமன் என்னும் நான்கு தெய்வங்களுமாம் ; இதனை, 1 "நாற்பெருந் தெய்வத்து நன்னகர்" என்பதற்கு நச்சினார்க்கினியர் உரைத்த உரையானறிக ; வருணப் பூதங்கள் பின் கூறப்படுதலின் ஈண்டுக் கூறியன அவை அல்லன என்க. வாயிலை யடைத்தனவெனவே தமது காவற்றொழிலை விடுத்துப்போயின வென்பதாயிற்று.


1 முருகு. 160.