12. அழற்படு காதை

அறவோர் மருங்கின் அழற்கொடி விடாது
மறவோர் சேரி மயங்கெரி மண்டக்


113
உரை
114

       அறவோர் மருங்கின் அழல் கொடி விடாது - அருள் நிறைந்த சான்றோர் பக்கலில் தீக்கொழுந்தினை விடாதாய், மறவோர் சேரி மயங்கு எரி மண்ட - வன்கண்மை நிறைந்த தீயோ ரது சேரிக்கண்ணே கண்டார் கலக்கங் கொள்ளுதற்குக் காரணமான நெருப்பு மிக்குச் செல்ல ;

       
1"அறவோர்....இவரைக் கைவிட்டுத், தீத்திறத்தார் பக்கமே சேர்க" என்றதனால், எரி அறவோர் மருங்கின் அணுகாது மறவோர் சேரி மண்டிற்று என்க.


1 சிலப். 21: 53-5.