12. அழற்படு காதை

115 கறவையும் கன்றும் கனலெரி சேரா
அறவை யாயர் அகன்றெரு அடைந்தன


115
உரை
116

       கறவையும் கன்றும் கனல் எரி சேரா அறவை ஆயர் அகன் தெரு அடைந்தன - ஆக்களும் அவற்றின் கன்றுகளும் கொளுத்துகின்ற தீயின் கட்படாவாய் அறத்தினையுடைய இடையரது அகன்ற தெருக்கண் சேர்ந்தன ;

       1"ஆகாத் தோம்பி ஆப்பய னளிக்குங், கோவலர் வாழ்க்கை யோர் கொடும்பா டில்லை" ஆகலான், அறவையாயர் என்றார்.


1 சிலப். 21: 53-5.