12. அழற்படு காதை

மறவெங் களிறு மடப்பிடி நிரைகளும்
விரைபரிக் குதிரையும் புறமதிற் பெயர்ந்தன


117
உரை
118

       மற வெங்களிறும் மடப்பிடி நிரைகளும் - வலி மிக்க கொடிய ஆண்யானைகளும் இளம் பெண்யானை வரிசைகளும், வினைபரிக் குதிரையும் புறமதிற் பெயர்ந்தன - விரையும் செல வினையுடைய குதிரைகளும் மதிற்புறத்தே சென்றன ;

       வெங்களிறு - மதயானை. பரி - செலவு.