12. அழற்படு காதை




130

திதலை அல்குல் தேங்கமழ் குழலியர்
குதலைச் செவ்வாய்க் குறுநடைப் புதல்வரொடு

பஞ்சியா ரமளியில் துஞ்சுதுயில் எடுப்பி
வாலநரைக் கூந்தல் மகளிரொடு போத


128
உரை
131

       திதலை அல்குல் தேங்கமழ் குழலியர் - திதலை பொருந்திய அல்குலினையும் மணங் கமழுங் கூந்தலினையுமுடைய மகளிர், குதலைச் செவ்வாய்க் குறுநடைப் புதல்வரொடு - மழலைச் சொல் பொருந்திய செவ்வாயினையும் குறுக நடக்கும் நடையினையும் உடைய புதல்வர்களை, பஞ்சி ஆர் அமளியில் துஞ்சு துயில் எடுப்பி - பஞ்சணை பொருந்திய படுக்கைக்கண் உறங்கும் உறக்கத்தினின்றும் எழுப்பி, வால் நரைக் கூந்தல் மகளிரொடு போத - வெண்மையாக நரைத்த கூந்தலையுடைய முதிய பெண்டிரோடு செல்லவும் ;

       புதல்வரொடு - புதல்வரை ; உருபு மயக்கம். வால் நரைக் கூந்தல் - மிக நரைத்த கூந்தல் எனலுமாம். குழலியர் புதல்வரைத் துயிலெடுப்பிக் கூந்தல் மகளிரொடு போத என்க.