|
140
145 |
எண்ணான் கிரட்டி இருங்கலை
பயின்ற
பண்ணியல் மடந்தையர் பயங்கெழு வீதித்
தண்ணுமை முழவம் தாழ்தரு தீங்குழல்
பண்ணுக்கிளை பயிரும் பண்ணியாழ்ப் பாணியொடு
நாடக மடந்தைய ராடரங் கிழந்தாங்கு
எந்நாட் டாள்கொல் யார்மகள் கொல்லோ
இந்நாட் டிவ்வூ ரிறைவனை யிழிந்து
தேரா மன்னனைச் சிலம்பின் வென்றிவ்
வூர்தீ யூட்டிய வொருமக ளென்ன |
|
எண்ணான்கு
இரட்டி இருங்கலை பயின்ற பண்ணி யல் மடந்தையர் பயங்கெழு வீதி - பரந்த அறுபத்து நான்கு
கலைகளையும் கற்றுத் தேர்ந்த இசையின் இயலறிந்த மகளிரது பயன் மிக்க தெருவின் கண்ணே,
தண்ணுமை முழவம் தாழ்தரு தீங்குழல் பண்ணுக் கிளை பயிரும் பண்ணியாழ்ப் பாணியொடு நாடக
மடந்தையர் ஆடு அரங்கு இழந்து - நாடக மகளிர் பண்ணின் வகைகளை இசைக்கும் பண்ணுத லமைந்த
யாழிசை யோடு மத்தளம் குடமுழா தாழ்ந்த செலவினையுடைய இனிய குழல் என்பவற்றையும் ஆடும்
அரங்கினையும் இழந்து, ஆங்கு எந் நாட்டாள்கொல் யார் மகள்கொல்லோ - எந் நாட் டினளோ
யார் புதல்வியோ, இந் நாட்டு இவ்வூர் இறைவனை இழந்து - இந் நாட்டில் இம் மதுரை நகரிடத்துத்
தன் கண வனை இழந்து, தேரா மன்னனைச் சிலம்பின் வென்று இவ்வூர் தீ ஊட்டிய ஒரு மகள்
என்ன - ஆராய்வு இல்லா அரசனைத் தன் சிலம்பானே வென்று இந் நகரினை எரி யூட்டிய ஒரு
மங்கை என்னவும் ;
கணிகையர்க்கு அறுபத்து நான்கு கலைகளுண்டென்பதனை,
1"எண்ணெண் கலையோர்" என முன்னர்
இந் நூலுள்ளும் 2"யாழ் முதலாக அறுபத்
தொருநான், கேரிள மகளிர்க் கியற்கை" எனப் பெருங்கதை யுள்ளும் கூறினமையானும் அறிக.
பண்ணியல் மடந் தையர் - இசை யறிவார். தாழ்தரு தீங்குழல் - இனிமை தங்கிய குழல் எனினுமமையும்.
பண்ணுக்கிளை - பண்ணும் திறமுமாம். பயிர்தல் - இசைத்தல். நாடக மடந்தையர், பயங்கெழு
வீதியிடத்து யாழ்ப் பாணியொடு தண்ணுமை முதலியவற்றை இழந்து, இறை வனை இழந்து மன்னனை
வென்று தீ யூட்டிய ஒரு மகள் எந் நாட்டாள் யார் மகள் என்ன என முடிக்க. முன்னவற்றுடன்
கூட்டி என்னவும் என உம்மை விரித்தலுமாம். நாடக மடந்தையர் - தளியிலார் ; கோயிற்
பெண்டிர்.
|
1
சிலப். 14 : 167. 2
பெருங். 1-35 : 843.
|
|