12. அழற்படு காதை





150
அந்தி விழவும் ஆரண வோதையும்
செந்தீ வேட்டலுந் தெய்வம் பரவலும்
மனைவிளக் குறுத்தலும் மாலை அயர்தலும்

வழங்குகுரன் முரசமு மடித்த மாநகர்க்


147
உரை
150

       அந்தி விழவும் ஆரண ஓதையும் - மாலைக் காலத் தயரும் சீபலியும் மறை முழக்கமும், செந்தீ வேட்டலும் தெய்வம்

       பரவலும் - சிவந்த தீயில் ஓமஞ் செய்தலும் கடவுட் பூச னையும், மனை விளக்கு உறுத்தலும் மாலை அயர்தலும் - மாலை யில் மனைக்கண் விளக்கேற்றலும் இல் உறை தெய்வத்தைப் பரவுதலும், வழங்கு குரல் முரசமும் மடிந்த மா நகர்-ஒலிதரும் குரலையுடைய முரசு முழங்குதலும் ஒழிந்த பெரிய நகரத்தில் ;

       அந்தி விழவு - சீபலி ; கோயிலில் நித்தலும் நடைபெறும் விழா. வேட்டல் - ஓமஞ்செய்தல். நாடக மடந்தையர் ஒரு மகள் என்ன அந்தி விழவு முதலிய மடிந்த மா நகர் என்க.