|
155
|
காதலற் கெடுத்த நோயொ
டுளங்கனன்று
ஊதுலைக் குருகின் உயிர்த்தன ளுயிர்த்து
மறுகிடை மறுகுங் கவலையிற் கவலும்
இயங்கலும் இயங்கும் மயங்கலும் மயங்கும்
ஆரஞ ருற்ற வீரபத் தினிமுன்
கொந்தழல் வெம்மைக் கூரெரி பொறாஅள்
வந்து தோன்றினள் மதுரா பதியென். |
|
காதலற்
கெடுத்த நோயொடு உளம் கனன்று - தன் கணவனைக் காணப் பெறாத துன்பத்தோடே உள்ளங்கொதித்து,
ஊது உலைக் குருகின் உயிர்த்தனள் - கொல்லன் உலைக் களத்து ஊதும் துருத்தி போலச் சுடுமூச்செறிந்தனள்,
உயிர்த்து மறுகிடை மறுகும் கவலையிற் கவலும் - அங்ஙனம் வெய் துயிர்த்து வீதியிற் சுழன்று
திரியும், குறுந்தெருக்களிற் கவலை யுடன், நிற்கும், இயங்கலும் இயங்கும் மயங்கலும் மயங்கும்
- பல வழியும் இயங்குதலுஞ் செய்யும், மயங்கி நிற்றலுஞ் செய்யும், ஆர் அஞர் உற்ற வீர
பத்தினி முன் - இங்ஙனம் பொறுத் தற்கரிய துன்பமுற்ற சீறிய கற்புடையாள் முன்னர், கொந்து
அழல் வெம்மைக் கூர் எரி பொறாஅள் வந்து தோன்றினள் மதுராபதியென் - திரண்ட அழலாகிய
வெம்மை மிக்க எரி யினைப் பொறளாய் மதுராபதி என்னும் தேவதை வந்து தோன்றினாள் என்க.
உள்ளுடல் கொதித்து வெவ்விதாக வரும்
பெருமூச்சுக்கு ஊது லைக் குருகின் காற்று உவமம் ; 1"ஊதுலைக்
குருகி னுயிர்த்தகக் தடங் காது" என்பது காண்க. மறுகிடை மறுகும் கவலையிற் கவலும் என்று
கூறியதனையே பின்னர்க் கூறி அங்ஙனஞ் செய்யும் வீரபத் தினிமுன் மதுராபதி தோன்றினள்
என்றார். இயங்கும் மயங்கும் என்பன முற்று ; பெயரெச்ச அடுக்காக்கி வீரபத்தினி என்பதுடன்
முடித்தலுமாம். இயங்கலு மியங்கும், மயங்கலு மயங்கும் என்பன, 2'சுழலலுஞ் சுழலும்' என்பதுபோல்
நின்றன. அரசன் தேவி தன் னுடன் துஞ்சியதறியாது உரை அவிந்திருப்ப, மிடைகொள்ள நாற்பாற்
பூதமும் பெயர எரி மண்ட அடைந்தன ; பெயர்ந்தன ; மயங்க, போத, ஏத்தினர் ; நாடக மடந்தையர்
இழந்து என்ன, மடிந்த மா நகர்க்கண் கனன்று உயிர்த்து மறுகும் ; கவலும் ; இயங்கும் ;
மயங்கும் ; அங்ஙனம் அஞருற்ற வீரபத்தினிமுன் மதுராபதி வந்து தோன்றினள் என வினை முடிக்க.
|
1
மணி. 2; 43.
|
|