12. அழற்படு காதை







               வெண்பா

மாமகளும் நாமகளும் மாமயிடற் செற்றுகந்த
கோமகளும் தாம்படைத்த கொற்றத்தாள் -- நாம
முதிரா முலைகுறைத்தாள் முன்னரே வந்தாள்
மதுரா பதியென்னு மாது.

(மாமகளு . . . . . . மாது) மாமகளும் - இலக்குமியும், நாமகளும் - கலைமகளும், மா மயிடன் செற்று உகந்த கோமகளும்தாம் -

உரை

       பெரிய மயிடன் என்னும் அவுணனைக் கொன்று மகிழ்ந்த கொற்றவை யும் ஆகிய மூவரும், படைத்த கொற்றத்தாள்-படைத்த வெற்றியினை யுடையாளும், நாம முதிரா முலை குறைத்தாள் - முன்னரே அச்சத்தைச் செய்யும் இளைய முலையைப் பறித்தாளுமாகிய வீரபத்தினியின் எதிரே, வந்தாள் மதுராபதி என்னும் மாது - மதுராபதி என்னுந் தேவதை வந்து தோன்றினாள்.

       
மகிஷன் என்னும் வடசொல் மயிடன் எனத் திரிந்தது ; எருமை உருவினன் என்பது பொருள். கொற்றமாவன நல்லோரைக் காத்தலும், அரசனை வழக்கில் வேறலும், தீயோரை அழித்தலும் என முறையே கொள்க. 12. அழற்படு காதை முற்றிற்று.