|
40
45
50
55
60
|
[வென்றி வெங்கதிர்
புரையும் மேனியன்
குன்றா மணிபுனை பூணினன் பூணொடு
முடிமுதற் கலன்கள் பூண்டனன் முடியொடு
சண்பகம் கருவிளை செங்கூ தாளம்
தண்கமழ் பூநீர்க் சாதியோடு இனையவை
கட்டும் கண்ணியும் தொடுத்த மாலையும்
ஒட்டிய திரணையோடு ஒசிந்த பூவினன்
அங்குலி கையெறிந்து அஞ்சுமகன் விரித்த
குங்கும வருணங் கொண்ட மார்பினன்
பொங்கொளி யரத்தப் பூம்பட் டுடையினன்
முகிழ்த்தகைச்
சாலி அயினி பொற்கலத் தேந்தி
ஏலு நற்சுவை இயல்புளிக் கொணர்ந்து
வெம்மையிற் கொள்ளும் மடையினன் செம்மையில்]
பவளச் செஞ்சுடர் திகழொளி மேனியன்
ஆழ்கடல் ஞால மாள்வோன் தன்னின்
முரைசொடு வெண்குடை கவரி நெடுங்கொடி
உரைசா லங்குசம் வடிவேல் வடிகயிறு
எனவிவை பிடித்த கையின னாகி
எண்ணருஞ் சிறப்பின் மன்னரை யோட்டி
மண்ணகம் கொண்டு செங்கோ லோச்சிக்
கொடுந்தொழில் கடிந்து கொற்றங் கொண்டு
நடும்புகழ் வளர்த்து நானிலம் புரக்கும்
உரைசால் சிறப்பின் நெடியோன் அன்ன
அரைச பூதத்து அருந்திறற் கடவுளும் |
|
பவளச்
செஞ்சுடர் திகழ் ஒளி மேனியன் - செவ்விய ஒளியினையுடைய பவளம்போலத் திகழ்கின்ற
ஒளி பொருந்திய மேனியையுடையோனாய், ஆழ்கடல் ஞாலம் ஆள் வோன் தன்னின் - ஆழ்ந்த
கடல் சூழ்ந்த இவ் வுலகினை ஆளும் மன்னனைப் போல, முரைசொடு வெண்குடை கவரி நெடுங் கொடி
உரை சால் அங்குசம் வடிவேல் வடி கயிறு என இவை பிடித்த கையினன் ஆகி - முரசமும் வெண்
கொற்றக் குடையும் கவரியும் நெடிய கொடியும் புகழமைந்த தோட்டியும் வடித்த வேலும் வடிகயிறும்
எனப்படும் இவற்றைக் கொண்ட கையினை யுடையனாய், எண் அருஞ் சிறப்பின் மன்னரை ஓட்டி
- அளவிடற்கரிய சிறப்பினையுடைய அரசர்களைப் போரின்கண் தோல்வியுறச் செய்து, மண்
அகங் கொண்டு செங்கோல் ஓச்சி - இந் நிலத்தினைத் தனதாகக் கொண்டு செங்கோல் செலுத்தி,
கொடுந்தொழில் கடிந்து - கொடிய செயல்களை விலக்கி, கொற்றங் கொண்டு - நீதியினை
மேற்கொண்டு, நடும் புகழ் வளர்த்து நால் நிலம் புரக்கும் - தன் பெயரை நிறுத்தற் குரிய
புகழினை மிகுந்து உலகினைக் காக்கின்ற, உரை சால் சிறப்பின் நெடி யோன் அன்ன - உரை
அமைந்த சிறப்பினையுடைய நெடியோன் என்னும் பாண்டியனை ஒத்த, அரைச பூதத்து அருந்திறற்
கடவுளும் - அரிய வலியினையுடைய அரசபூதமாகிய கடவுளும் ;
வடிகயிறு - புரவியை வசமாக்கும் கயிறு.
முரசு குடை முதலியன அரசற்குரியன வென்பது, 1
"படையுங் கொடியுங் குடையு முரசும், நடைநவில் புரவியுங் களிறுந் தேரும், தாரு முடியு நேர்வன
பிறவும், தெரிவுகொள் செங்கோ லரசர்க் குரிய" என்னுஞ் சூத்தி ரத்து எடுத்தோத்தானும்,
பிறவு மென்னும் இலேசானும் பெறப்படும்.
கொடுந்தொழில் என்பதற்குத் தன்கட்
கொடிய தொழில் எனவும் குடிகளிடத்துக் கொடிய தொழில் எனவுங் கோடல் அமையும். நடும்புகழ்
- அழியாப்புகழ். நெடியோன் - வடிம்பலம்ப நின்ற பாண்டியன் ; 2"பொலந்தார்
மார்பின் நெடியோன்," 3 "முந்நீர்
விழவி னெடியோன்" என்பனவும், அவற்றின் உரையும் காண்க. மேனியனாய்க் கையினனாகி நெடியோனையொத்த
கடவுளும் என்க. இனி, ஞாலமாள்வோன் என்பதற்கு அருச்சுனன் எனவும் மன்னர் என்பதற்குத்
துரியோதனாதியர் எனவும், நெடியோன் என்பதற்குக் கண்ணன் எனவும் அரும்பதவுரையாசிரியர்
நலிந்து பொருள் உரைப்பர் "பவளச் செஞ்சுடர்" முதலாக "அருந்திறற் கடவுள்" ஈறாக அரச
பூதத்தைக் கூறிற்று" என்பது அரும்பதவுரை.
|
1
தொல். பொருளதி. 626. 2
மதுரை. 61. 3 புறம். 8.
|
|