|
90
95
100
|
கிழவன் என்போன் கிளரொளிச்
சென்னியின்
இளம்பிறை சூடிய இறையவன் வடிவினோர்
விளங்கொளிப் பூத வியன்பெருங் கடவுளும்
[கருவிளை புரையு மேனிய னரியொடு
வெள்ளி புனைந்த பூணினன் தெள்ளொளிக்
காழகம் செறிந்த உடையினன் காழகில்
சாந்து புலர்ந்தகன்ற மார்பினன் ஏந்திய
கோட்டினும் கொடியினும் நீரினும் நிலத்தினும்
காட்டிய பூவிற் கலந்த பித்தையன்
கம்மியர் செய்வினைக் கலப்பை ஏந்திச்
செம்மையின் வரூஉஞ் சிறப்புப் பொருந்தி]
மண்ணுறு திருமணி புரையு மேனியன்
ஒண்ணிறக் காழகஞ் சேர்ந்த வுடையினன்
ஆடற் கமைந்த அவற்றொடு பொருந்திப்
பாடற் கமைந்த பலதுறை போகிக்
கலிகெழு கூடற் பலிபெறு பூதத்
தலைவ னென்போன் தானுந் தோன்றிக் |
|
மண்ணுறு
திருமணி புரையும் மேனியன் - கழுவப்பட்டநீல மணிபோலும் மேனியனாய், ஒள் நிறக் காழகம்
சேர்ந்த உடையினன் - ஒள்ளிய கருநிறஞ் சேர்ந்த உடை யினனாய், ஆடற்கு அமைந்த அவற்றொடு
பொருந்தி - உலகினை ஆளுதற்கேற்ற உழுபடை முதலியவற்றுடன் பொருந்தி, பாடற்கு அமைந்த
பல துறை போகி - புலவர் பாடுதற்கேற்ற ஈகைத் துறை பலவற்றிலும் முடியச் சென்று, கலி கெழு
கூடல் பலிபெறு பூதத் தலைவன் என்போன் தானும் - ஆரவாரம் மிக்க கூடற்கண் பலியினைப்
பெறும் பூதத் தலைவனென்னும் வேளாண் பூதமும், தோன்றி - வெளிப்பட்டு ;
காழகம் - கருமை, உடை ; இரட்டுற மொழிதலாகக்
கொள்க. வேளாண் மாந்தர் உலகினை ஆளுதலாவது தமது உழவு தொழிலால் ஏனோரை யெல்லாம்
தாங்குதலும், தம்மரசர்க்கு வெற்றியை உண்டாக்குதலுமாம் ; 1"உழுவா
ருலகத்தார்க் காணியஃதாற்றா, தெழு வாரை யெல்லாம் பொறுத்து," 2
"பலகுடை நீழலுந் தங்குடைக் கீழ்க் காண்பர், அலகுடை நீழ லவர்" என்பன காண்க. ஆடுதற்கமைந்த
வாச்சியங்கள் எனவும், பாட்டின் துறைகள் எனவும் அரும்பதவுரையாசிரியர் கொண்ட கருத்துக்கள்
வேளாண்பூத மாதற்குப் பொருந்துவன அல்ல ; அப் பொருள் அடிகள் கருத்தாயின் கூத்தர் முதலாயினாரை
அகப்படுத்திக் கூறினாரெனல் வேண்டும்.
"'மண்ணுறு திருமணி' முதலாகப் 'பலிபெறு
பூதத்தலைவன்' ஈறாக வேளாண் பூதத்தைக் கூறிற்று" என்பது அரும்பதவுரை.
|
1
குறள், 1034. 2
குறள். 1032.
|
|