(பெருஞ்சோறு
பயந்த ...... பிற்படச் சென்று) அறன் அறி செங்கோல் மறநெறி நெடுவாள் - அறநூலினை அறிந்து அதற்கேற்ப நிற்கும் செங்கோலையும் வீரவழியிலே ஒழுகிய நெடிய வாளினையும்
உடைய, புறவு நிறை புக்கோன் - புறாவின் பொருட்டுத் துலாம் புக்கோனும், கறவை முறை
செய்தோன் - ஆவின் பொருட்டுத் தன் மகனைத் தேர்க்காலிலிட்டு முறை செய்தோனும்
ஆய, பூம்புனற் பழனப் புகார் நகர் வேந்தன் - பொலிவுற்ற நீரினையுடைய வயல்கள் நிறைந்த
புகார் நகரத்தையுடைய சோழனது, தாங்கா விளையுள் நன்னாடதனுள்- நிலம் பொறாத விளைவினையுடைய
நல்ல சோணாட்டின்கண், வலவைப் பார்ப்பான் பராசரன் என்போன் - அறிவில் வல்ல
பரா சரனென்னும் அந்தணன், பெருஞ்சோறு பயந்த திருந்து வேல் தடக்கை - பாரதப்போரில்
பெருஞ் சோறளித்த திருந்திய வேலேந்திய பெரிய கையினையும், திரு நிலைபெற்ற பெருநாளிருக்கை
- செல்வம் நிலைபெற்ற பெருமை மிக்க காலையோலக்கத் தினையுமுடைய, குலவு வேற் சேரன்
கொடைத் திறங்கேட்டு - விளங்கும் வேலினையுடைய சேரனது கொடையின் இயல்பினைக் கேள்வியுற்று,
வண் தமிழ் மறையோற்கு வான் உறை கொடுத்த திண் திறல் நெடுவேல் சேரலன் காண்கு என
- வளவிய தமிழுணர்ந்த அந்தணனுக்குத் துறக்கத்துறைதலைத் தந்த உறுதியான வலி மிக்க
நீண்ட வேலினையுடைய சேரனைக் காண்பேன் என்று கருதி, காடும் நாடும் ஊரும் போகி -
காடு நாடு ஊர் இவைகளைக் கடந்து, நீடு நிலை மலையம் பிற்படச் சென்று - உயர்ந்த நிலையினையுடைய
பொதியின்மலை பிற்படும்படி போய்;
தடக்கையினையும் இருக்கையினையுமுடைய
சேரன் என்றியைக்க. பெருஞ்சோறு பயந்தவென அக் குலத்து முன்னோன் செய்கை அவன்மேல்
ஏற்றிக் கூறப்பட்டது. உதியஞ் சேரலாதன் பாரதப்போரில் இரு திறப் படைக்கும் சோறளித்தனனென்பது,
1"அலங்குளைப் புரவி யைவரொடு சினைஇ,
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை, ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்,
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்" எனப் புறத்தினும். 2"ஓரைவ
ரீரைம் பதின்ம ருடன்றெழுந்த, போரிற் பெருஞ் சோறு போற்றாது தானளித்த, சேரன்"
என மேல் இந் நூலுள்ளும் வருதலானும், பெருஞ் சோற்றுதியஞ் சேரலாதன் ன்னும் பெயரானும்
அறியப்படும். பிற சான்றோரும் சேரனது நாளோலக்கத்தைத் "தண்கட னாட னொண்பூங் கோதை,
பெருநா ளிருக்கை" எனக் கூறியுள்ளமை காண்க. புறவுநிறை புக்கமையும் கறவைமுறை செய்தமையும்
ஆகிய வரலாறுகளை 3 வழக்குரை காதையானும்,
அதன் உரையானும் அறிக. மறையோன் - பாலைக் கௌதமனார் என்னும் புலவர். உறை, முதனிலைத்
தொழிற் பெயர். சேரலன் - இமைய வரம்பனின் றம்பியாகிய பல்யானைச் செல்கெழு குட்டுவன்.
பதிற்றுப் பத்தின் மூன்றாம் பத்தினால் தன்னைப் பாடிய பாலைக் கௌதம னாருக்குத்
குட்டுவன் துறக்கமளித்த வரலாறு, அதன் பதிகத்தில், 4"பாடிப்
பெற்ற பரிசில் : நீர் வேண்டியது கொண்மின் என, கணவனுடன் பார்ப்பனியும் சுவர்க்கம்
புகல் வேண்டுமென, பார்ப் பான் பெரியோரைக் கேட்டு ஒன்பது பெருவேள்வி வேட்பித்துப்
பார்ப்பானையும் பார்ப்பனியையும் காணா பெற்றுளது. இக் காப்பியத்துள்ளும் 5"நான்
கொண்டு, மேனிலை யுலகம் விடுத்தோ னாயினும் வேந்தன் குறிக்கப்படுதல் அறியற்பாற்று
1
புறம், 1. 2 சிலப். 29. ஊசல்.
3 சிலப். 20 : 51-5.
4 பதிற். 3-ம் பத்து : பதி 5
சிலப். 28 ; 37-8.
|