13. கட்டுரை காதை





70
நீடுநிலை மலயம் பிற்படச் சென்றாங்கு
ஒன்றுபுரி கொள்கை இருபிறப் பாளர்
முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி
ஐம்பெரு வேள்வியுஞ் செய்தொழில் ஓம்பும்
அறுதொழி லந்தணர் பெறுமுறை வகுக்க


66
உரை
70

      ஆங்கு - அவ்விடத்தே, ஒன்று புரி கொள்கை இரு பிறப்பாளர் வீடுபேற்றினை விரும்பும் கொள்கையினையும் இரண்டு பிறப்பினையும் உடையாராகிய, முத்தீச் செல்வத்து - மூன்று வகைப்பட்ட தீயை வளர்க்குஞ் செல்வத்தோடே, நான் மறை முற்றி - நான்கு மறைகளையும் முற்ற அறிந்து, ஐம்பெரு வேள்வியும் செய்தொழில் ஓம்பும் - ஐந்தாகிய பெருமையுடைய வேள்விகளைச் செய்தலாகிய தொழிலையும் பேணும், அறு தொழில் அந்தணர் பெறுமுறை வகுக்க - ஆறுதொழிலினையுடைய அந்தணர் பெறுகின்ற முறையை அப் பராசரனுக்கு வகைப்படுத்திக் கூற ;

ஒன்று - வீடு. இரு பிறப்பு - உபநயனத்திற்கு முன்னர் ஒரு பிறப்பும் பின்னர் ஒரு பிறப்பும். முத்தீ - ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினி. ஐம்பெரு வேள்வி - கடவுள் வேள்வி, பிரம வேள்வி, பூதவேள்வி, மானிட வேள்வி, தென்புலத்தார் வேள்வி.

அறுதொழில் - ஓதல், ஓதுவித்தல். வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் எனபன.