13. கட்டுரை காதை

நாவலங் கொண்டு நண்ணா ரோட்டிப்
பார்ப்பன வாகை சூடி ஏற்புற
நன்கலங் கொண்டு தன்பதிப் பெயர்வோன்

71
உரை
73

      நா வலங்கொண்டு - நாவானே தருக்கித்து வெற்றி கொண்டு, நண்ணார் ஓட்டி - பகைவர்களை ஓடச் செய்து, பார்ப்பன வாகை சூடி - பார்ப்பன வாகையைச் சூடி, ஏற்புற நன்கலம் கொண்டு தன் பதிப் பெயர்வோன் - பொருத்தமுற நல்ல அணிகலங்களைப் பெற்றுத் தன் ஊர்க்கு மீண்டு செல்வோன் ;
நாவலம் - நாவான் வரும் வெற்றி. நண்ணார் என்றது கல்வி அறிவுடையராய்த் தன்னொடு வாது செய்ய வந்தாரை. பார்ப்பன வாகையாவது 1"கேள்வியாற் சிறப்பெய்தியானை, வேள்வியான் விறல்மிகுத்தன்று." பெயர்தல் - மீளல். சேரலற் காண்கெனப் போகிச் சென்று வலங்கொண்டு ஓட்டிச் சூடிக் கலங்கொண்டு பெயர்வோன் என முடிக்க.


1 பு.வெ, வாகை. 9.