செங்கோல்
தென்னன் திருந்து தொழில் மறையவர்
தங்கால் என்பது ஊரே - செங்கோலினையுடைய பாண்டியனுடைய
திருந்திய செயலினையுடைய அந்தணர்களது ஊர் திருத்தங்கால்
என்பது, அவ்வூர்ப் பாசிலை பொதுளிய போதி மன்றத்து -
அவ்வூரின்கண் பசிய இலை தழைந்த அரசு நிற்கும் மன்றத்தின்
கண், தண்டே குண்டிகை வெண்குடை காட்டம் - தண்டினையும்
கமண்டலத்தினையும் வெள்ளிய குடையினையும் சமித்தையும்,
பண்டச் சிறு பொதி பாதக் காப்பொடு - பண்டங்களையுடைய
சிறிய மூட்டையினையும் மிதியடியுடன், களைந்தனன்
இருப்போன் - கீழே வைத்திருப்போனாகிய அவன் ;
மறையவர் - பஞ்சக்கிராமிகள் என்ப. தண்டே - ஏ, எண்ணிடைச் சொல்,
|