தமர்
முதல் நீங்கி - தம் சுற்றத்தாரினின்றும் நீங்கி, குழலும் குடுமியும் மழலைச் செவ்வாய்த்
தளர்நடை ஆயத்து - குழலினையும் குடுமியினையும் நிரம்பாத சொல்லையுடைய சிவந்த வாயினையும்
தளர்ந்த நடையினையும் உடைய கூட்டத்துடன்,
விளையாடு சிறாஅர் எல்லாஞ் சூழ்தர - விளையாடுகின்ற
சிறுவர் யாவரும் அவ் வந்தணனைச் சூழ்ந்துகொள்ள ;
குழல், குடுமி என்பதனானே சிறுவரும் சிறுமியரும்
என்பது பெறப்படும் ; குழல் - சுருண்ட மயிர் எனவும், குடுமி - உச்சியில் வைத்த சிகை
யெனவும் கொள்ளலுமாம். முதல் - இடம். எல்லாரும் எனற்பாலது வழக்குப் பற்றி எல்லா
மென்றாயது.
பராசரன் கூறுவான் :
|