13. கட்டுரை காதை


குண்டப் பார்ப்பீ ரென்னோ டோதியென்
பண்டச் சிறுபொதி கொண்டுபோ மின்னெனச்


88
உரை
89

      குண்டப் பார்ப்பீர் - அந்தணச் சிறுவர்களே, என்னோடு ஓதி என் பண்டச் சிறு பொதிகொண்டு போமின் என - னுடனே மறையினையோதி என்னுடைய பண்டங்கள் வைத்த சிறிய மூடையினை நீவிர் பெற்றுச் சென்மின் என்று அவன் கூற ;

      குண்டப் பார்ப்பீர் என்பதற்குப் பிழுக்கை மாணிகாள் எனவும் சிறுமாணிகாள், சிறுபிள்ளைகாள் எனினுமாம் எனவும் உரைப்பர் அரும்பதவுரையாசிரியர். மாணி - பிரமசாரி.