|
20 |
வாட்டிய
திருமுகம் வலவயிற் கோட்டி
யாரைநீ என்பின் வருவோய் என்னுடை
ஆரஞர் எவ்வம் அறிதி யோவென |
|
வாட்டிய
திருமுகம் வல வயின் கோட்டி - தனது வாட்டங்கொண்ட முகத்தினை வலப்பக்கத்தே வளைத்து
நோக்கி், யாரை நீ என் பின் வருவோய் - என் பின்னர் வருகின்றோய் நீ யார், என்னுடை
ஆர் அஞர் எவ்வம் அறிதியோ என - என்னுடைய பொறுத்தற்கரிய மன வருத்தத்திற்குக் காரணமான
துன்பத்தினை நீ அறிவாயோ என்று கண்ணகி கேட்ப ;
வாடிய என்பது வாட்டிய என விகாரமாயிற்று.
யாரை என்பதன் கண் ஐ அசைநிலை இடைச்சொல்.
... |
|