சீர்த்தகு
சிறப்பின் வார்த்திகன் புதல்வன் - பெருமையமைந்த சிறப்பினையுடைய வார்த்திகன்
என்பான் புதல்வனாகிய, ஆல் அமர் செல்வன் பெயர் கொண்டு வளர்ந்தோன் - தக்கிணாமூர்த்தி
என்னும் பெயர்பெற்று வளர்ந்தவன், பால் நாறு செவ்வாய்ப் படியோர் முன்னர் - பால்
தோன்றும் சிவந்த வாயினையுடைய தன்னையொத்த இளையோர் முன்பு, தளர்நா ஆயினும் மறை
விளி வழாஅது உளம் மலி உவகையோடு ஒப்ப ஓத - தளர்வுறும் நாவினையுடையனாயினும் மறையின்
ஓசையை முறை பிறழாது உள்ளத்து நிறைந்த மகிழ்ச்சியுடன் அவனோடு ஒருபடித்தாக ஓதுதலைச்
செய்ய ;
வார்த்திகன் - ஓரந்தணன், புதல்வனாகிய
வளர்ந்தோனென்க. ஆலமலர் செல்வன் - கல்லாலின் புடையமர்ந்த இறைவன் ; தக்கிணாமூர்த்தி.
'பானாறு செவ்வாய்ப் படியோர்' என்றது மிக்க இளஞ்சிறார் என்பதுணர்த்திற்று. படியோர்
- ஒத்தவர். இனி, இதற்குப் பிரமசாரிகள் எனக் கூறிப் படிமம் படி என்றாயிற்று என்பாருமுளர்.
|