தக்கிணன்
தன்னை மிக்கோன் வியந்து - மறையினைத் தன்னோடொப்ப ஓதிய தக்கிணாமூர்த்தியாகிய
சிறுவனைப் பராசரன் வியந்து பாராட்டி, முத்தப் பூணூல் - அழகிய பூணூலையும், அத் தகு புனைகலம்
- அத் தகுதி வாய்ந்த புனையும் அணிகலங்களையும,் கடகம் தோட்டொடு கையுறை ஈத்து -
கைவளையும் தோடுமாகிய இவற்றுடனே பரிசிலாகக் கொடுத்து, தன் பதிப்பெயர்ந்தனன் ஆக
- தன்னகரத்து மீண்டானாக ;
வலவைப் பார்ப்பானாகலான் மிக்கோன் என்றார். முத்தப பூணூல் - முத்துவடமாகிய பூணூல்
எனவும், அத்தகு - அழகு பொருந்திய எனவும் கூறலுமாம். கையுறை - காணிக்கை ; ஈண்டுப்
பரிசில்.
|