வார்த்திகன்
மனைவி கார்த்திகை என்போள் - அங்ஙனம் சிறையிடப் பெற்ற வார்த்திகனுடைய மனைவியாகிய
கார்த்திகை என்னும் பெயருடையாள், அலந்தனள் ஏங்கி அழுதனள் நிலத்திற் புலந்தனள்
புரண்டனள் பொங்கினள் - மயங்கி ஏக்கம் கொண்டு நிலத்தில் வீழ்ந்தழுது கடவுளை வெறுத்துப்
பூமியிற் புரண்டு வெகுண்டனள், அது கண்டு - அதனை யுணர்ந்து, மை அறு சிறப்பின் ஐயை கோயிற்
செய் வினைக் கதவம் திறவாது - குற்றமற்ற சிறப்பினையுடைய துர்க்கையின் கோயிற்கண்
செயற்குரிய தொழிலெல்லாம் முற்றுப் பெற்ற கதவம் திறவாதாயிற்று ;
அலந்தனள், அழுதனள், புலந்தனள், புரண்டனள்
முற்றெச்சம். ஐயை கோயில் - மதுரைக்கண் உள்ள துர்க்கை கோயில்.
1
குறள். 756.
|