13. கட்டுரை காதை



110
செய்வினைக் கதவந் திறவா தாகலின்
திறவா தடைத்த திண்ணிலைக் கதவம்
மறவேல் மன்னவன் கேட்டனன் மயங்கிக்
கொடுங்கோ லுண்டுகொல் கொற்றவைக் குற்ற
இடும்பை யாவதும் அறிந்தீ மின்னென

108
உரை
112

      ஆகலின் - ஆகையால், திறவாது அடைத்த திண்நிலைக் கதவம் - அங்ஙனம் திறவாது மூடிய திணிந்த நிலையினையுடைய கதவினை, மறவேல் மன்னவன் கேட்டனன் மயங்கி - வீரஞ் செறிந்த வேலினையுடைய பாண்டியன் கேட்டு மயக்குற்று, கொடுங் கோல் உண்டுகொல் - எனது கோல் கோடியது உண்டோ, கொற்றவைக்கு உற்ற இடும்பை யாவதும் அறிந்தீமின்ன - ஐயைக்குப் பொருந்திய துன்பத்தின் எவ்வாற்றானும் உணர்ந்து எதற்குக் கூறுமின் என்று கூற ;

      அடைத்த திண்ணிலைக் கதவம் கேட்டனன் என்றாராயினும் கதவம் அடைத்ததனைக் கேட்டனன் என்பது கருத்தாகக் கொள்க
.
      கொல், ஐயம். யாவதும் - சிறிதாயினும் எனலுமாம். அறிந்தீமின், வினைத்திரிசொல்.



1 குறள். 756.