13. கட்டுரை காதை



ஏவ லிளையவர் காவலற் றொழுது
வார்த்திகற் கொணர்ந்த வாய்மொழி யுரைப்ப

113
உரை
114

      ஏவலிளையவர் காவலற் றொழுது - அரசனேவல் செய்யுங் காவலர் மன்னனை வணங்கி, வார்த்திகற் கொணர்ந்த வாய் மொழியுரைப்ப - வார்த்திகனைக் கொண்டு வந்து சிறையிட்ட உண்மைச் செய்தியினைக் கூற ;

மொழி - ஈண்டுச் செயல் மேற்று.