நிலைகெழு
கூடல் நீள் நெடு மறுகின் - நிலைத்தல் பொருந்திய கூடல் நகரத்து மிக நீண்ட தெருக்களில்
உள்ள, மலை புரை மாடம் எங்கணுங் கேட்ப-மலையினையொத்து உயர்ந்த மாளிகைகள் எவ்விடத்தும்
கேட்கும் வண்ணம், கலை அமர் செல்வி கதவம் திறந்தது - கலையை ஊர்தியாக விரும்பிய
கொற்றவை கோயிலின் கதவு திறந்தது ;
நிலைகெழு கூடல் என்றது என்றும் அழியாத கூடல் என்றவாறு. கூடல் மாடம் மறுகின் மாடம்
என்க.
|