ஆடித்
திங்கள் பேர்இருட் பக்கத்து அழல் சேர் குட்டத்து அட்டமி ஞான்று வெள்ளி வாரத்து
- ஆடித்திங்களின் கிருட்டின பக்கத்து அட்டமியும் கார்த்திகையின் குறையும் சேர்ந்த
வெள்ளிக்கிழமையன்று, ஒள் எரி உண்ண - விளக்க மமைந்த தீக் கதுவலானே, உரை சால்
மதுரையோடு அரைசு கேடுறும் எனும் உரையும் உண்டே நிரைதொடியோயே - புகழ் மிக்க மதுரைநகரத்தோடே
அரசன் கேடெய்துவான் என்னும் சொல்லும் உண்டாயிற்று நிரைத்த தொடியினையுடையாய் ;
அழல் - கார்த்திகை நாள். குட்டம் - குறைந்தது ; குறைந்த சீருள்ள அடியைக் குட்டமென்பதும்
அறிக. 1"ஆடிய லழற்குட்டத்து" என்புழி அழற்குட்டம்
என்பது கார்த்திகையின் முதற்காலை யுணர்த்திற்று. ஈண்டு அதன்முதற் காலையோ அன்றி
ஒழிந்த மூன்று காலையுமோ உணர்த்தியதாகல் வேண்டும். அதனால் திங்கள் மேடம் அல்லது
இடபத்தில் இருத்தல் பெற்றாம். உரை - அறிவர் மொழி ; சோதிடச் சொல்லுமாம்.
நிரை தொடியோயே உரையுமுண்டே என்க.
1 புறம். 228.
|