13. கட்டுரை காதை




150
அரும்பொருள் வேட்கையிற் பெருங்கலன் சுமந்து
கரந்துறை மாக்களிற் காதலி தன்னொடு
சிங்கா வண்புகழ்ச் சிங்க புரத்தினோர்
அங்கா டிப்பட் டருங்கலன் பகரும்
சங்கமன் என்னும் வாணிகன் தன்னை


147
உரை
151

      அரும்பொருள் வேட்கையிற் பெருங்கலன் சுமந்து - பெறுதற்கரிய செல்வத்தினை ஈட்டும் விருப்பத்தானே சிறந்த அணிகலங்களைச் சுமந்து, கரந்து உறை மாக்களின் - மறைந்துறையும் மக்களைப்போலப் போந்து, காதலி தன்னொடு சிங்கா வண்புகழ்ச் சிங்கபுரத்தின் ஓர் அங்காடிப்பட்டு - தன் மனைவியோடும் அழியாத வளவிய புகழினையுடைய சிங்கபுரத்திலுள்ள ஓர் கடைவீதியுள் புக்கு, அருங்கலன் பகரும் சங்கமன் என்னும் வாணிகன் தன்னை - விலையிடற்கரிய அணிகளை விற்குஞ் சங்கம னெனப்படுகின்ற வணிகனை ;

கரந்துறைமாக்கள் - ஒற்றர் முதலாயினார் ; 1 "துறந்தார் படிவத்தாராகி" என்பது காண்க. மாக்களிற் போந்து என ஒரு சொல் வருவித்துரைக்க. சிங்காமை - அழியாமை.


1 குறள். 586.