13. கட்டுரை காதை




170
எம்முறு துயரம் செய்தோ ரியாவதும
தம்முறு துயரமிற் றாகுக வென்றே
விழுவோ ளிட்ட வழுவில் சாபம்
பட்டனி ராதலிற் கட்டுரை கேள்நீ


167
உரை
170

      எம் உறு துயரம் செய்தோர் யாவதும் தம்முறு துயரம் இற்று ஆகுக என்றே - எமக்கு இம் மிக்க துன்பத்தினைச் செய்தவர் எவ்வகையானும் இத் தகைய துன்பம் தம்மை அடையப் பெறுவார்களாக என்று, விழுவோள் இட்ட வழுவில் சாபம் பட்டனிர் - விழுகின்றவள் இட்ட தவறுதலில்லாத சாபத்தினைப் பெற்றீர்கள் ;

      செய்தோர் என்ற எழுவாய்க்குப் பயனிலையாகப் படுவாராக என ஒருசொல் வருவிக்க. இச் சாப வரலாறு மணிமேகலைக்குக் கண்ணகி கூறியதாகச் 1 சாத்தனாராலும் கூறப்பெற்றுள்ளது.

      நீலியென்போள் முறையோவெனப் பூசலிட்டு வாழ்த்திக் கூடுபு நின்றோள் ஆகுகவென்றே விழுவோள் என்க,.

      ஆதலிற் கட்டுரை கேள் நீ - ஆதலால் யான் கூறும் பொருள் பொதிந்த உரையினை நீ கேட்பாயாக ;


1 மணி 26 : 5-34.