13. கட்டுரை காதை

உம்மை வினைவந் துருத்த காலைச்
செம்மையி லோர்க்குச் செய்தவ முதவாது

171
உரை
172

      உம்மை வினை வந்து உருத்தகாலை செம்மை இலோர்க்குச் செய்தவம் உதவாது - முற்பிறப்பிற் செய்த தீவினை பயனளிக்க நேர்ந்த பொழுது அக் காலத்துச் செவ்விய உள்ளமிலராயினார்க்கு முன்செய்த நல்வினை சிறிதும் உதவாது ;

      உம்மைவினை என்றதனான், தவமுதவாதது இப் பிறப்பால் என்க. உம்மை என்பதனை வினையொடும் செம்மையொடுங் கூட்டுக. தவம் உதவாது என்றதனால் உம்மை வினையென்றது தீவினையை என்க. ஒருவன் செய்த நல்வினை தீவினைகள் தம் பயனை நுகர்விக்குங்கால், தம்முள் ஒன்று நிற்கும்போது மற்றொன்று நில்லாது ; தனித்தனியே நின்று நுகர்விக்கும் என்பது கருத்து. ;