13. கட்டுரை காதை

25 பெருந்தகைப் பெண்ணொன்று கேளாயென் நெஞ்சம்
வருந்திப் புலம்புறு நோய்


25
உரை
26

       பெருந்தகைப் பெண் ஒன்று கேளாய் என் நெஞ்சம் வருந்திப் புலம்புறு நோய் - பெரிய தகுதியையுடைய பெண்ணே என்னுள்ளம் துன்பத்தான் வருத்தமுற்றுப் புலம்புறுதற்குரிய தொன்றனைக் கேட்பாயாக ;

       
நோயால் வருந்திக் புலம்புறும் ஒன்றென்க ; புலம்புறுதற் கேதுவாகிய நோய் ஒன்று எனலுமாம்.