"தெய்வந் தொழாஅள்.......விருந்து" மண்ணக
மாதர்க்கு அணியாய கண்ணகி - இவ் வுலகத்துக் கற்புடை மகளிர்க்கு அழகு செய்வாளாய கண்ணகி,
தெய்வமாய் விண்ணக மாதர்க்கு விருந்து - தெய்வமாகி வானின்கண் அரமகளிர்க்கு விருந்தாயினாள்,
தெய்வந்தொழாஅள் கொழுநன் தொழுவாளைத் தெய்வம் தொழுந்தகைமை திண்ணிதால் - ஆகலான்
வேறு தெய்வத்தை வணங்காளாய்த் தன் கணவனை வணங்குவாளைத் தெய்வமும் வணங்குந் தன்மை
உறுதி யுடைத்தாம். விருந்தாயினாள் என விரக்க. 1
"தெய்வந் தொழாஅள் கொழுநற்றொழு தெழுவாள்" என்னும் குறளின் கருத்து இதில் அமைந்துள்ளமை
காண்க. ஆல், அசை. கட்டுரை காதை முற்றிற்று.
1.
குறள். 55.
|