13. கட்டுரை காதை

தோழிநீ ஈதொன்று கேட்டியென் கோமகற்கு
ஊழ்வினை வந்தக் கடை


27
உரை
28

       தோழி நீ ஈது ஒன்று கேட்டி எம் கோமகற்கு ஊழ்வினை வந்தக் கடை - தோழி நீ எம் மன்னனாகிய பாண்டியனுக்குப் பழவினை வந்தெய்திய வகையாகிய இஃதொரு பொருளைக் கேட்பாயாக ;

       
ஈது, சுட்டு நீண்டது. "எங்கோமகற், கூழ்வினை வந்தக் கடை" என்பதனை, 1"வினைவிளை கால மாதலின் யாவதுஞ், சினையலர் வேம்பன் தேரா னாகி" என முன்னர் வந்தமையானும் அறிக. வந்தக்கடை - வந்தபடி ; ககரம் விரித்தல் விகாரம் ; வினையெச்சமாகக்கொண்டு, வந்தவிடத்து அதனாலெய்திய துன்பமாகிய ஈதொன்றை என்றுரைத்தலுமாம்.


1 சிலப். 16 : 148--9.