13. கட்டுரை காதை


30
மாதராய் ஈதொன்றும் கேளுன் கணவற்குத்
தீதுற வந்த வினை ; காதின்


29
உரை
30

       மாதராய் ஈது ஒன்று கேள் உன் கணவற்குத் தீதுற வந்த வினை - நங்காய் உன் கணவனுக்குத் தீமை பொருந்த வந்து எய்திய வினையாகிய இவ் வொன்றினைக் கேட்பாயாக ;

தீது - கொலை.
இனிப் பாண்டியர் கோலின் செம்மை கூறுவாள் :