|
30
|
தீதுற வந்த வினை ;
காதின்
மறைநா வோசை யல்ல தியாவதும்
மணிநா வோசை கேட்டது மிலனே
அடிதொழு திறைஞ்சா மன்ன ரல்லது
குடிபழி தூற்றுங் கோலனு மல்லன்
|
|
காதின்
மறை நா ஓசையல்லது - தன் காதுகளால், அந்தணர் தம் நாவால் ஓதுகின்ற வேதவொலியினைக்
கேட்டறிந்த தல்லது. யாவதும் மணி நா ஓசை கேட்டதும் இலனே-ஒரு பொழுதும் மணியின் நாவோசையைக்
கேட்டறியான், அடி தொழுது இறைஞ்சா மன்னர் அல்லது - அவன் தன்னடிகளைக் கையாற்றொழுது
தலை வணங்காத பகையரசர் பழி கூறித் தூற்றப்பெறினல்லது, குடி பழி தூற்றுங் கோலனும் அல்லன்-குடிகள்
பழி கூறித் தூற்றப்பெறும் கொடுங்கோலுடையனுமல்லன் ;
மதுரையில்
மறையொலி மிக்குள்ளமை 1"நான்மறைக் கேள்வி
நவில்குர லெடுப்ப, ஏம வின்றுயி லெழுத லல்லதை,.... கோழியினெழாதெம் பேரூர் துயிலே"
என்பதனானும் அறியப்படும். தம் குடிகளில் குறையுற்றார் அறிவிக்கவென அரசன் கட்டிய மணியினை
, ஆண்டுக்
குறையுற்று அடிப்பார் ஒருவரும் இலர் ஆகலான் "மணிநாவோசை கேட்டது மிலனே" என்றார். எனவே
அவனாட்டு அவனாட்சியில் குறையுற்றார் இதுவரை ஒருவருமிலர் என்பதாயிற்று. இறைஞ்சா மன்னர்
- பகை அரசர். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் கூறிய வஞ்சினத்தில் 2"குடிபழி
தூற்றுங்கோலே னாகுக" என்றது ஈண்டு அறியத்தகுவது.
1 பரிபா.
2 புறம். 71.
|
|