1. குன்றக் குரவை


5

முலையிழந்து வந்துநின்றீர் யாவிரோவென முனியாதே
மணமதுரையோ டரசுகேடுற வல்வினைவந் துருத்தகாலைக்
கணவனையங்கு இழந்துபோந்த கடுவினையேன் யானென்றாள்



4
உரை
6

       முனியாதே - அங்ஙனங்கேட்ட அவர்களை வெகுளாதே, மண மதுரையோடு அரசு கேடுற வல்வினை வந்து உருத்தகாலைக் கணவனை அங்கு இழந்து போந்த கடுவினையேன் யான் என்றாள் - தீவினை தன் பயனை அளிக்கத் தோன்றிய காலத்து மணம் நிறைந்த மதுரை நகரத்தோடே அரசனும் கெட்டொழிய என் கணவனை அம் மதுரை யிடத்தே இழந்து வந்த தீவினையுடையேன் யான் என்று கூறினாள் ;

மணம் நிறைதலை 1"அளந்துணர் வறியா வாருயிர் பிணிக்கும், கலவைக் கூட்டங் காண்வரத் தோன்றி" என்பது முதலியவற்றானறிக ; கலியாண மதுரை யென்பர் அரும்பதவுரையாசிரியர்.

1சிலப். 13 : 128--9.