|
|
சரவணப்பூம் பள்ளியறைத் தாய்மா
ரறுவர்
திருமுலைப்பா லுண்டான் திருக்கைவே லன்றே
வருதிகிரி கோலவுணன் மார்பம் பிளந்து
குருகு பெயர்க்குன்றம் கொன்ற நெடுவேலே ; (9)
|
(9)
|
சரவணப்பூம் பள்ளியறைத் தாய்மா
ரறுவர்
திருமுலைப்பா லுண்டான் திருக்கைவே லன்றே
வருதிகிரி கோலவுணன் மார்பம் பிளந்து
குருகு பெயர்க்குன்றம் கொன்ற நெடுவேலே ;
|
|
வரு
திகிரி கோல் அவுணன் மார்பம் பிளந்து குருகு பெயர்க் குன்றம் கொன்ற நெடுவேலே - வளரும்
மலையினைச் சூழ வரும் அசுரனுடைய நெஞ்சு பிளக்கக் கிரவுஞ்ச மலையினை அழித்த நெடிய வேல்,
சரவணப் பூம் பள்ளியறைத் தாய்மார் அறுவர் திருமுலைப்பால் உண்டான் திருக்கை வேல் அன்றே
- சரவணப் பொய்கையில் தாமரை மலராகிய பள்ளியறைக் கண்ணே அறுவராகிய தாயரின் முலைப்பாலினை
உண்ட முருகனுடைய அழகிய கையிலுள்ள வேலேயாம் ;
அறுவர் - கார்த்திகைப் பெண்டிர். உண்டான். வினைப்பெயர். திகிரி - மலை ; திகிரி
கோலவுணன் - மலையைச் சூழவரும் அவுணன் என்பது அரும்பதவுரை. திகிரிபோலவுணன் என்பதும்,
திகிரியோனவுணன் என்பதும் பாட வேறுபாடு.
பிளந்து, பிளக்கவெனத் திரிக்க. குருகு பெயர்க்குன்றம் - கிரவுஞ்சமலை ; 1"குருகொடு
பெயர்பெற்ற மால்வரை யுடைத்து" என்பதுங் காண்க.
சீர்கெழு செந்தில் முதலிய மூன்றும் தம் வரைவு முடிதல் வேண்டித் தெய்வம் பராயது.
பாட்டுமடை--, |
1
பரி. 5 : 9
|
|