|
|
இறைவளை நல்லாய் இதுநகையா கின்றே
கறிவளர் தண்சிலம்பன் செய்தநோய் தீர்க்க
அறியாள்மற் றன்னை அலர்கடம்பன் என்றே
வெறியாடல் தான்விரும்பி வேலன்வரு கென்றாள் ; (10)
|
|
இறைவளை
நல்லாய் - கையிடத்தே வளையலை அணிந்த தோழீ, கறி வளர் தண் சிலம்பன் செய்த நோய்
- மிளகுக் கொடி வளரும் குளிர்ந்த மலையினையுடையான் எனக்குச் செய்த நோயினை, தீர்க்க
அறியாள் மற்று அன்னை - அவற்கு மணஞ் செய்து கொடுத்தலானே போக்குதற்குத் தாய் அறியாளாய்,
அலர் கடம்பன் என்றே - இவளைக் கடப்பமலர் மாலையை அணிந்த முருகன் அணங்கினான் என்று
கொண்டு, வெறியாடல் தான் விரும்பி வேலன் வருகென்றாள் - அவற்கு வெறியாட்டயர் தலைக்
கருதி வேலனை வருகவென்றழைத்தாள், இது நகையாகின்று - இச் செயல் என்னால் எள்ளி நகைத்தற்
குரித்தாயிற்று ;
இறை - முன்கை. கடம்பன் என்றே - கடம்பன்
அணங்கினானென்றே என விரித்துரைக்க. வேலன் - படிமத்தான் ; வெறியாடுவோன். நல்லாய்
அன்னை வேலன் வருகென்றாள் இது நகையாகின்றே எனக் கூட்டுக. |
|