|
|
என்றியாம் படா மறைநின்று கேட்டருளி
மன்றலங் கண்ணி மலைநாடன் போவான்முன்
சென்றேன் அவன்றன் திருவடி கைதொழுது
நின்றேன் உரைத்தது கேள்வாழி தோழி
|
|
என்று யாம் பாடமறை நின்று கேட்டருளி மன்றல் அம் கண்ணி மலை நாடன் போவான்முன் -
இன்னணம் யாம் பாடாநிற்க அதனை மறைவிடத்தே நின்று கேட்டுப் போவானாகிய மணங் கமழும்
அழகிய மாலையைச் சூடிய மலை நாடன் முன்னர், சென்றேன் அவன்றன் திருவடி கை தொழுது நின்றேன்
- சென்று அவனுடைய அடிகளைக் கையால் தொட்டு வணங்கி நின்ற நான், உரைத்தது கேள் வாழி
தோழி - அவனிடத்துக் கூறியதனைக் கேட்பாய் தோழி;
யாம் பாட என்று தலைவியையும் உளப்படுத்திக் கூறினாள் தோழி என்க. மறைநின்று - சிறைப்புறமாக
நின்று. போவான், சென்றேன், வினைப்பெயர்கள். |
|