|
(22)
|
பாடுற்றுப்
பத்தினிப் பெண்டிர் பரவித் தொழுவாளோர்
பைத்தர வல்குல்தம் பைம்புனத் துள்ளாளே
பைத்தர வல்குல் கணவனை வானோர்கள்
உய்த்துக் கொடுத்தும் உரையோ ஒழியாரே
|
|
பாடு
உற்றுப் பத்தினிப் பெண்டிர் பரவித் தொழுவாள் ஓர் பைத்தர வல்குல் நம் பைம்புனத்து
உள்ளாளே - பெருமை யுற்றுக் கற்புடை மகளிர் தாம் போற்றி வணங்கப் படுவாளாய ஒப்பற்ற
அராப் படம் போன்ற அல்குலினையுடையாள் நமது பசிய புனத்திடத்துள்ளாள், பைத்தர வல்குல்
கணவனை வானோர்கள் உய்த்துக் கொடுத்தும் உரையோ ஒழியாரே - தேவர்கள் அவள் கணவனை
அவளிடத்துக் கொண்டு வந்து தந்தும் அவளைக் புகழ்தல் ஒழியார்;
கற்புடை மகளிர் கண்ணகியை வணங்குதலே
தமக்குப் பெருமை யாகக் கோடலான் ''பாடுற்று.........தொழுவாள்'' என்றாள்; மேல் 'பாடுகம்'
என்றமையால் அங்ஙனம் பாடுதலுற்று என்றுமாம். பைத்தரவு - அரவின் படம்; தூ, பகுதிப்பொருள்
விகுதி. உரை - புகழ்; புகழ்தல். |
|