வானக வாழ்க்கை யமரர் தொழுதேத்தக்
கான நறுவேங்கைக் கீழாளோர் காரிகையே
கான நறுவேங்கைக் கீழாள் கணவனொடும்
வானக வாழ்க்கை மறுதரவோ வில்லாளே
23
உரை
23
வானக வாழ்க்கை அமரர் தொழுது ஏத்தக் கான நறு வேங்கைக் கீழாள் ஓர் காரிகையே - துறக்க
வாழ்க்கையினை உடைய தேவர்கள் வணங்கிப் போற்றக் காட்டிடத்து மணங்கமழும். வேங்கை
மரத்தடியில் அமர்ந்தாள் ஓர் நங்கை, கான நறுவேங்கைக் கீழாள் கணவனொடும் வானக வாழ்க்கை
மறு தரவோ இல்லாளே - காட்டிடத்து நல்ல வேங்கையின் அடியில் அமர்ந்த அவள் தன் கணவனோடும்
துறக்க வாழ்வினின்றும் மீட்சியிலளாயினாள்;
கண்ணகி தன் கணவனொடும் வானவூர்தி
ஏறித் துறக்கம் புக்கது கண்ட குற மகளிர் அவர் மீண்டும் வரக்காணாமையான் மறுதரவில்லாள்
என்றார் என்க. மறுதரவு - மீட்சி.