1. குன்றக் குரவை

(24)



மறுதர வில்லாளை ஏத்திநாம் பாடப்
பெறுகதில் லம்ம விவ்வூரு மோர்பெற்றி
பெற்றி யுடையதே பெற்றி யுடையதே
பொற்றொடி மாதர் கணவன் மணங்காணப்
பெற்றி யுடையதிவ் வூர்



24
உரை
24

        மறுதரவு இல்லாளை ஏத்தி நாம் பாடப் பெறுகதில் அம்ம இவ் வூரும் ஓர் பெற்றி - அங்ஙனம் மீளவில்லாத அக் கற்புடையாளை நாம் போற்றிப் பாட இவ் வூரும் ஓர் நோன்பினைப் பெறுவதாக, பெற்றியுடையதே பெற்றியுடையதே பொற்றொடி மாதர் கணவன் மணங்காணப் பெற்றி உடையது இவ்வூர் - பொற்றொடி நங்கை தன் கணவனது வரைவினைக் காண இவ்வூர் ஓர் நோன்பினையுடையது;

       தில், விழைவின்கண் வந்தது. பெற்றி - நோன்பு; பெருமையுமாம். இவ்வூர் கணவன் மணத்தைக் காணப் பெற்றியுடையது என்றுமாம்.