|
25
|
என்றியாம்
கொண்டு நிலைபாடி ஆடும் குரவையைக்
கண்டுநம் காதலர் கைவந்தா ரானாது
உண்டு மகிழ்ந்தானா வைகலும் வாழியர்
வில்லெழுதிய இமயத்தொடு
கொல்லி யாண்ட குடவர் கோவே.
|
|
.என்று யாம் கொண்டு நிலை பாடி ஆடும் குரவையைக் கண்டு நம் காதலர் கை வந்தார் - இன்னணமாக
யாம் கொண்டு நிலையாகிய பாட்டினைப் பாடி ஆடுகின்ற குரவைக் கூத்தினைக் கண்டு நம் காதலர்
நம் வழியிலே பட்டார், வில் எழுதிய இம யத்தொடு கொல்லி ஆண்ட குடவர் கோவே - தன்
வில்லினைப் பொறித்த இமய மலையோடு கொல்லி மலையினையும் ஆண்ட குடநாட்டார் வேந்தன்,
ஆனாது உண்டு மகிழ்ந்து ஆனா வைக லும் வாழியர் - அமையாதே வீர பானத்தை உண்டு களித்து
எண்ணிலமையாத நாள்களெல்லாம் வாழ்வானாக.
கொண்டுநிலை - குரவையில் ஒருவர் கூற்றினை
ஒருவர் கொண்டு கூறுஞ் செய்யுளென்பர் நச்சினார்க்கினியர்; 1"குரவை
தழீ இ யாமாடுங் குரவையுட், கொண்டுநிலை பாடிக்காண்" என்பதன் உரை காண்க. அரசனை வாழ்த்தி
முடித்தல் மரபு.
இது தலைமகட்குத் தோழி வரைவு கூறியது.
இச் செய்யுள் கொச்சகக் கலி
குன்றக் குரவை முற்றிற்று.
|
|