|
15 |
சிறுகுடி யீரே சிறுகுடி யீரே
தெய்வங் கொள்ளுமின் சிறுகுடி யீரே
நிறங்கிளர் அருவிப் பறம்பின் தாழ்வரை
நறுஞ்சினை வேங்கை நன்னிழற் கீழோர்
தெய்வங் கொள்ளுமின் சிறுகுடி யீரே
|
|
சிறு
குடியீரே சிறு குடியீரே தெய்வம் கொள்ளுமின் சிறு குடியீரே - சிறு குடியிலுள்ளீர் இவளைத்
தெய்வமாகக் கொள்ளுமின், நிறம் கிளர் அருவிப் பறம்பின் தாழ்வரை - வெள்ளிய நிறம்
விளங்குகின்ற அருவியினையுடைய நெடுவேள் குன்றமாகிய பறம்பினுடைய தாழ்வரையிடத்து, நறுஞ்சினை
வேங்கை நல் நிழற்கீழ் ஓர் தெய்வங் கொள்ளுமின் சிறு குடியீரே-மணம் பொருந்தும் கிளைகளையுடைய
வேங்கை மரத்து நல்ல நிழலின் கண்ணே ஒப்பற்ற தெய்வமாகப் பண்ணிக் கொள்ளுமின் ;
சிறுகுடி - வேட்டுவரூர். சிறுகுடியீரே எனப்
பலகாற் கூறியது உவகையும் விரையும் பற்றி. பறம்பு - மலையென்னும் பொருட்டு தெய்வமாகவென
விரிக்க. |
|