1. குன்றக் குரவை


என்னொன்றும் காணேம் புலத்தல் அவர்மலைப்
பொன்னாடி வந்த புதுப்புனல்
பொன்னாடி வந்த புதுப்புனல் மற்றையார்
முன்னாடி னோம்தோழி நெஞ்சன்றே;      (4)



4
உரை
4

       என்னொன்றும் காணேம் புலத்தல் அவர் மலைப் பொன் ஆடி வந்த புதுப்புனல் - அவரது மலைக்கண் பொற்பொடியோடு கலந்து வந்த புதிய புனலோடு புலத்தற்கு யாம் யாதொரு காரணமும் கண்டிலேம், பொன் ஆடி வந்த புதுப்புனல் மற்றையார் முன் ஆடின் நோம் தோழி நெஞ்சு அன்றே - ஆயின் அங்ஙனம் பொற்பொடியோடு கலந்து வந்த புதிய நீரின்கண் ஏனைய மகளிர் முற்பட ஆடினால் தோழீ நம் உள்ளம் வருந்தும் ; எவன் என்பது என்னென்றாயிற்று.