|
|
யாதொன்றுங் காணேம் புலத்தல் அவர்மலைப்
போதாடி வந்த புதுப்புனல்
போதாடி வந்த புதுப்புனல் மற்றையார்
மீதாடி னோம்தோழி நெஞ்சன்றே; (5)
|
|
யாது
ஒன்றுங் காணேம் புலத்தல் அவர் மலைப் போது ஆடி வந்த புதுப்புனல் - அவர் மலைக்கண் பூக்களோடு
கலந்து வந்த புதிய நீரோடு புலத்தற்கு யாம் அதனிடைச் சிறிது பிழையுங் கண்டிலேம், போதாடி
வந்த புதுப்புனல் மற்றையார் மீது ஆடின் நோம் தோழி நெஞ்சு அன்றே - ஆயின், அவ்வாறு
மலரோடு கலந்து வந்த புதிய நீரின்கண் மற்றைப் பெண்டிர் மேம்பட ஆடினால் தோழீ நம்
உள்ளம் வருந்தும்;
எற்றொன்றும் என்பது முதலாகிய மூன்றும்
சிறைப்புறமாகத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. கந்தருவ மாரக்கத்தால் இடை மடக்கி
வந்தன.
பாட்டு மடை - பாட்டினை மடுத்தல். |
|