Untitled Document
2. காட்சிக் காதை

10





15
வளமலர்ப் பூம்பொழில் வானவர் மகளிரொடு

விளையாட்டு விரும்பிய விறல்வேல் வானவன்
பொலம்பூங் காவும் புனல்யாற்றுப் பரப்பும்
இலங்குநீர்த் துருத்தியும் இளமரக் காவும்
அரங்கும் பள்ளியும் ஒருங்குடன் பரப்பி
ஒரு நூற்று நாற்பதி யோசனை விரிந்த

பெருமால் களிற்றுப் பெயர்வோன் போன்று


10
உரை
16

       வள மலர்ப் பூம் பொழில் வானவர் மகளிரொடு விளை யாட்டு விரும்பிய விறல் வேல் வானவன் - வள மிக்க பூக்கள் மலிந்த பொலிவினையுடைய சோலைவாய் அரமகளிரோடு விளை யாடலை விரும்பிய வெற்றியினையுடைய வேலேந்திய இந்திரன், பொலம் பூங் காவும் புனல் யாற்றுப் பரப்பும் - அழகிய பூங்கா வினையும் நீரொழுகும் யாற்றுப் பரப்பினையும், இலங்கு நீர்த் துருத்தியும் இள மரக் காவும் - விளங்குகின்ற நீரினையுடைய ஆற்றிடைக் குறையையும் இளமரக்காவினையும், அரங்கும் பள்ளியும் - நாடக சாலைகளையும் மண்டபங்களையும், ஒருங்கு டன் பரப்பி ஒரு நூற்று நாற்பது யோசனை விரிந்த - நூற்று நாற்பது யோசனை அளவாக விரிந்தவற்றை ஒருசேரப் பரப்பி, பெரு மால் களிற்றுப் பெயர்வோன் போன்று - பெரிய மத்த யானையின்மீது செல்வோனைப்போலச் சென்று;

       நூற்று நாற்பது யோசனை விரிந்த பொலம் பூங்கா முதலியவற் றைப் பரப்பிக் களிற்றின்மீது செல்லும் இந்திரன்போன்று என்க. சென்று என ஒரு சொல் வருவிக்க. இந்திரன் போன்றென்னும் உவமையால் இவனும் பூங்கா முதலியவற்றைப் பரப்பிக் கொண்டு களிற்றின்மீது சென்றானென்பது பெற்றாம். களிற்றின்மேல் பரப்பி என்றுங் கொள்க.