Untitled Document
2. காட்சிக் காதை



80





85

அரிமா னேந்திய அமளிமிசை இருந்த
திருவீழ் மார்பின் தென்னர் கோமான்
தயங்கிணர்க் கோதை தன்றுயர் பொறாஅன்

மயங்கினன் கொல்லென மலரடி வருடித்
தலைத்தாள் நெடுமொழி தன்செவி கேளாள்
கலக்கங் கொள்ளாள் கடுந்துயர் பொறாஅள்
மன்னவன் செல்வுழிச் செல்க யானெனத்
தன்னுயிர் கொண்டவ னுயிர்தே டினள்போல்

பெருங்கோப் பெண்டும் ஒருங்குடன் மாய்ந்தனள்


78
உரை
86

       அரி மான் ஏந்திய அமளிமிசை இருந்த திரு வீழ் மார்பின் தென்னர் கோமான் - சிங்கஞ் சுமந்த அரசு கட் டிலில் அமர்ந்திருந்த திரு விரும்பும் மார்பினையுடைய பாண்டி யர் பெருமான் மயங்கி விழ்ந்தானாக அது கண்டு, தயங்கு இணர்க் கோதை தன் துயர் பொறாஅன் மயங்கினன் கொல் லென - விளங்கும் பூங்கொத்தணிந்த கூந்தலையுடைய கண்ணகி யின் துன்பத்தினைப் பொறானாய் மயக்க மெய்தினனோ என்று, மலர் அடி வருடி - அவன் மலர் போலும் பாதங்களைத் தடவி, தலைத்தாள் நெடுமொழி தன்செவி கேளாள் - கண்ணகி பெரு மிதத்துடன் கூறிய வஞ்சின மொழியினைத் தன் செவியகத்துக் கேளாமலும், கலக்கங் கொள்ளாள் - உள்ளங் கலங்காமலும், கடுந்துயர் பொறாஅள் - கணவனுற்ற துன்பத்தைப் பொறா ளாய், மன்னவன் செல்வுழிச் செல்க யான் என - அரசன் சென்றவிடத்தே யானும் செல்வேனாக என்று கூறி, தன் உயிர் கொண்டு அவன் உயிர் தேடினள் போல் - தனது உயிரானே அம் மன்னனது உயிரைத் தேடுவாள் போன்று, பெருங்கோப் பெண்டும் ஒருங்குடன் மாய்ந்தனள் - கோப்பெருந் தேவியும் அவ் வரசனோடு சேர மடிந்தனள்;

       1"அரிமா னேந்திய வமளிமிசை யிருந்தனன், றிருவீழ் மார்பிற் றென்னவர் கோவே" என முன்னருங் கூறினார். கோமான் மயங்கி வீழ்ந்தனனாக அது கண்டு என விரித்துரைத்துக் கொள்க. "கெடுக வென் னாயுளென, மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே" என்றதூஉம் காண்க. கடுந்துயர் - அரசன் துஞ்சினமை. மன்னவன் அரசு கட் டிலில் மயங்கி விழ்ந்ததனைக் கண்ட தேவி கண்ணகியின் துயர் பொறாது மயங்கினன் போலுமென அடிகளை வருடி, அவன் துஞ்சி னமை அறிந்து, செல்க யானெனக் கூறி, அவன் உயிர் தேடினள்போல் உடன் மாய்ந்தனள் என்க. உயிருடன் தாழ்த்திராது கடுக மரித்தா ளென்பார் 'நெடுமொழி கேளாள்', 'கலக்கங் கொள்ளாள்' என் றார். உம்மை இறந்தது தழீஇயது.

 


1 சிலப், 20 : 22--3.
.